அழகுமலையான் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :934 days ago
சோழவந்தான்; சோழவந்தான் அருகே நாச்சிகுளத்தில் அழகுமலையான் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இன்று காலை 2ம் காலயாக பூஜையை தொடர்ந்து கடம் புறப்பாடானது. பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோயில் வீட்டில் உள்ள சுவாமி ஆபரண பெட்டிக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. சிறப்பு அபிஷேகம் அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. இக்கோயில் அழகுமலையான் பங்காளிகள் பெட்டி எடுப்பு விழா நடந்து 55 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் தற்போது கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தியுள்ளனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அழகுமலையான் பங்காளிகள் செய்திருந்தனர்.