பழநி வரும் பக்தர்களுக்காக புதிய பேட்டரி கார்
ADDED :533 days ago
பழநி; பழநி கிரி வீதியில் பக்தர்களின் வசதிக்கென புதிய பேட்டரி கார்களை கோயில் நிர்வாகம் வாங்கியுள்ளது. பழநி கிரி வீதியில், ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்த நடவடிக்கையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உத்தரவின்படி வாகனங்கள் கிரி வீதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கிரிவீதியில் நடந்து செல்லும் பக்தர்களுக்கு ரோப் கார், வின்ச், படிப்பாதை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று செல்ல வாகனங்களை இயக்க கோயில் நிர்வாகத்திற்கு கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி பேட்டரி கார்கள் மற்றும் ஒரு மினி பஸ் கட்டணம் இல்லாமல் பக்தர்களை அழைத்து சென்று வருகிறது. தற்போது கோயில் நிர்வாகம் சார்பில் தலா ரூ.5 லட்சம் மதிப்பில் ரூ. 15 லட்சத்திற்கு 3 பேட்டரி கார்கள் வாங்கப்பட்டு மக்கள் வசதிக்கான இயக்கப்பட உள்ளது.