திருப்புவனம் அழகிய மணவாள ரெங்கநாத பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்
ADDED :668 days ago
திருப்புவனம்; திருப்புவனம் அழகிய மணவாள ரெங்கநாத பெருமாள் கோயிலில் நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பெருமாள் கோயிலில் வருடம் தோறும் பங்குனி திருவிழாவின் ஒரு கட்டமாக அழகிய மணவாள பெருமாளுக்கும் பூமி நீளா ரெங்கநாயகி நாச்சியாருக்கும் திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படுவது வழக்கம், சிறப்பு பூஜைக்கு பின் காலை 9:30 மணிக்கு திருக்கல்யாண உற்சவத்தை ராகவன் பட்டர் நடத்தி வைத்தார்.பக்தர்களுக்கு பிரசாதம் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் ராகவன் உள்ளிட்ட பக்தர்கள் செய்திருந்தனர்.