உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோமல் கிருபாகூபேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

கோமல் கிருபாகூபேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை; கோமல் கிருபாகூபேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா கோமல் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான அன்னபூரணி அம்பாள் சமேத கிருபா கூபேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற இக்கோவில் அஸ்த நட்சத்திர பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது. இக்கோவிலின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 25 ஆம் தேதி வியாழச் சாலை பூஜைகள் தொடங்கப்பட்டன. இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடைபெறந்து பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு செய்யப்பட்டு  மங்கள வாத்தியங்கள் இசைக்க கோவிலை வலம் வந்து விமானத்தை அடைந்தன. இதனை அடுத்து  சர்வ சாதகம் விக்னேஷ் சத்யோஜா தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் ஓதவிமான கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து  சுவாமி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !