/
கோயில்கள் செய்திகள் / வைரலாகும் நடிகர் டேனியல் பாலாஜி கட்டிய ரகதூள் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில்!
வைரலாகும் நடிகர் டேனியல் பாலாஜி கட்டிய ரகதூள் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில்!
ADDED :554 days ago
சென்னை, தமிழ் சினிமாவில் வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் திடீர் மரணம் அடைந்தார். அவரது திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் ஆவடி அருகே அம்மன் கோயில் ஒன்றை அவரது சொந்த செலவில் கட்டியுள்ளார். அவர் ரகதூள் அங்காள பரமேஸ்வரி அம்மன் எனும் பெயரில் கோயில் கட்டி, கும்பாபிஷேகத்தையும் டேனியல் பாலாஜி நடத்தி முடித்துள்ளார். இந்த கோவில் தனது அம்மாவின் ஆசைக்காக கட்டியதாக அவர் கூறியிருந்தார்.