உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் மண்டல பூஜை

ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் மண்டல பூஜை

ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோவிலில் மண்டல பூஜை நடந்தது. பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உப கோயிலான ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பிப்.15 ல் கும்பாபிஷேகம் நடந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று 48 ம் நாள் மண்டல பூஜை நடந்தது. நேற்று முன்தினம் இரவு அரசப்பபிள்ளைபட்டி கிராம மக்கள் சார்பில் தலையூற்று அருவியில் இருந்து புனித தீர்த்தக் கலசங்கள் ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. நேற்று காலை கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகள் நடந்தது. இதனைத் தொடர்ந்து குழந்தை வேலப்பர் சுவாமிக்கு புண்ணிய தீர்த்தங்கள் ஊற்றப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் லட்சுமி, அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், அறங்காவலர்கள் சுப்பிரமணியன், மணிமாறன், ராஜசேகரன் சத்யா, கண்காணிப்பாளர் மகேஸ்வரி கலந்து கொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !