சின்னாளபட்டி ராம அழகர் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்
ADDED :585 days ago
சின்னாளபட்டி; சின்னாளபட்டி ராம அழகர் கோயில் சித்திரை திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. சின்னாளபட்டி பிருந்தாவன தோப்பு, ராம அழகர் சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக லட்சுமி நாராயணருக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன், மகா தீபாராதனை நடந்தது. சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றம் நடந்தது. முக்கிய நிகழ்வாக சித்ரா பவுர்ணமியில், வெள்ளியங்கிரி சஞ்சீவி நதியில் எதிர்சேவை, அடுத்தடுத்து மோகினி அவதாரம், பூப்பல்லக்கு ஊர்வலம், புட்டுத்திருவிழா நடக்க உள்ளது.