அயோத்தியில் சைத்ர நவராத்திரி விழா; ராமர் தரிசனம் கண்டு பக்தர்கள் பரவசம்
ADDED :543 days ago
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் சைத்ரா நவராத்திரி விழா சிறப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது. நேற்று முதல் ஏப்ரல் 17 வரை நடைபெறும் விழாவில் ராம் லல்லா, கையால் நெய்யப்பட்ட மற்றும் கையால் நூற்கப்பட்ட காதி பருத்தியால் செய்யப்பட்ட ஆடைகள், வஸ்திரங்கள் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். சைத்ரா நவராத்திரி இரண்டாம் நாளான இன்று, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ராமரை பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர். சைத்ரா நவராத்திரி திருவிழா ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது. விழாவின் 9ம் நாள் ராம நவமி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக அயோத்தி நகரே விழாக்கோலம் பூண்டுள்ளது.