பழநி மலைக்கோயிலில் தங்கமயில் வாகனத்தில் சின்ன குமாரசுவாமி புறப்பாடு
ADDED :724 days ago
பழநி; பழநியில் மாத கார்த்திகையை முன்னிட்டு நேற்று மலைக்கோயிலில் விளக்கு பூஜை நடந்தது. பழநி மலைக்கோயிலில் பங்குனி மாத கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது. திருவிளக்கு பூஜை மலைக்கோயிலில் நடைபெற்றது. தங்கமயில் வாகனத்தில் சின்ன குமாரசுவாமி புறப்பாடு நடைபெற்றது. அதன்பின் தங்கரத புறப்பாடு நடைபெற்றது. கார்த்திகை நட்சத்திர நாளில் அதிகளவில் பக்தர்கள் தங்கரத புறப்பாட்டில் கலந்து கொண்டனர். திரு ஆவினன்குடி கோயிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, நடந்தது. சுவாமி தரிசனம் செய்ய உள்ளூர், வெளியூர் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.