உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி பட்டாபிராம மந்திரில் சீதா ராமரின் திருக்கல்யாணம்

காளஹஸ்தி பட்டாபிராம மந்திரில் சீதா ராமரின் திருக்கல்யாணம்

காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு துணை கோயிலான ஸ்ரீ பட்டாபி ராம மந்திரில் ஸ்ரீ ராம நவமியை யொட்டி நேற்று (17ம்தேதி) புதன்கிழமை சீதா ராமரின் உற்சவ மூர்த்திகள் பல்வேறு வகையான நறுமண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக கணபதி பூஜையை தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீப தூப நெய்வேத்தியங்கள் சமர்ப்பிக்கப்பட்டது. தொடர்ந்து, மங்கள வாத்தியங்கள், வேத மந்திரங்கள் முழங்க ஸ்ரீ சீதா ராமரின்* திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஜெய் ஸ்ரீராம் கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சியில்காளஹஸ்தீஸ்வர சுவாமி தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் அஞ்சூரு தாரக சீனிவாசுலு, கோயில் செயல் அலுவலர் எஸ்.வி.நாகேஸ்வரராவ் மற்றும் அறங்காவலர் குழு  உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் உட்பட திரளான பக்தர்கள்  பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ சீதாராமர்  திருக்கல்யாண உற்சவத்தை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !