ஓட்டளிக்காமல் இருப்பது பாவம்; மதுரை ஆதீனம்
ADDED :543 days ago
இது ஜனநாயக நாடு. நல்லவர்களை தேர்வு செய்ய கட்டாயம் ஓட்டளிக்க வேண்டும். நான் தம்பிரானாக இருந்தபோது ஓட்டளித்தேன். மதுரை ஆதீனகர்த்தராக பொறுப்பேற்ற பின், முதன்முறையாக இத்தேர்தலில் ஓட்டளிக்க உள்ளேன். ஓட்டளிக்காமல் இருப்பது பாவம். அதேசமயம் நோட்டாவுக்கு ஓட்டளிக்க கூடாது. தேசபக்தி உள்ளவர்களாக பார்த்து, தகுதியானவருக்கு ஓட்டளிக்க வேண்டும். நோட்டாவுக்கு ஓட்டளித்தால் யாருக்கும் பிரயோஜனம் இல்லை. யாருக்கும் பயனில்லாமல் ஓட்டளிப்பதைவிட தகுதியானவருக்கு ஓட்டளித்தால் ஆட்சி அமைக்க பயனுள்ளதாக இருக்கும். நமக்கும் நிம்மதியாக இருக்கும் என மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கூறினார்.