அயோத்தி ராமர் கோயிலில் இதுவரை ஒன்றரை கோடி பேர் தரிசனம்; தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வழிபாடு
அயோத்தி: உலகப்புகழ் பெற்ற அயோத்தி ராமர் கோயில் பிரான் பிரதிஷ்டை செய்த பின்னர் இது வரை தோராயமாக ஒன்றரை கோடி பேர் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து ராமபிராமனை தரிசித்துள்ளனர். இத்தகவலை ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷே த்ரா பொதுசெயலர் சம்பத்ராய் கூறியுள்ளார்.
ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா பொதுச் செயலர், சம்பத் ராய் கூறுகையில், "தினமும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர், கோவிலுக்கு தரிசனம் செய்கின்றனர். ஜனவரி 22ம் தேதி, பிரான் பிரதிஷ்டை முதல், சுமார் 1.5 கோடி பேர் ராம் லல்லாவை தரிசனம் செய்ய வந்துள்ளனர். கோயில் கீழ்தளம் கட்டுமான பணி முழு அளவில் முடிந்துள்ளது. முதல் தளம் விடுபட்ட கட்டுமான பணி வேகமாக நடந்து வருகிறது. கோயிலை சுற்றி 14 அடி உயரத்தில் காம்பவுண்டு சுவர் கட்டி முடிக்கப்படும். கோயில் வளாகத்தில் 600 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதனை உள்ளூர் மக்களே அவரவர் அக்கறை எடுத்து தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகின்றனர்.ஒரே நேரத்தில் 25 ஆயிரம் பேர் தங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு சராசரியாக ஒரு லட்சம் பேர் வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதுவரை ஒன்றரை கோடிபேர் தரிசனம் செய்துள்ளனர். இவ்வாறு சம்பத்ராய் கூறினார்.