நாட்டரசன்கோட்டையில் வெண்பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கிய அழகர்
ADDED :633 days ago
சிவகங்கை; சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் வெண்பட்டு உடுத்தி அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. நாட்டரசன்கோட்டை பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் நேற்று மாலை வெள்ளி கேடயத்தில் பெருமாள் எழுந்தருளினார். இரவு கோயிலில் இருந்து வெள்ளி குதிரையில் சுவாமி அழகர் கோலத்தில் புறப்பட்டார். பின் மண்டகப்படி, கோயில்களில் எழுந்தருளினார். இன்று காலை மணிக்கு வெண்பட்டு உடுத்தி பூவாளம் ஆற்றில் இறங்கினார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.