கோதண்டராம சுவாமி கோவிலில் மகா ருத்ர யக்யம்
ADDED :531 days ago
கோவை; ராம் நகர், கோதண்டராம சுவாமி கோவிலில் மகா ருத்ர யக்யம் நடந்தது. இதன் முதல் நிகழ்வாக காலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம் ஆகியன நடந்தது. காலை ஏழு முப்பது மணி அளவில் மகன்யாச ஜெபம், அதை தொடர்ந்து ருத்ர ஆவாஹனம், ஸ்ரீ ருத்ர ஜெபம் ஏகாதச திரவிய ருத்ரா அபிஷேகம், கோ பூஜை, ஸ்ரீ ருத்ர ஹோமம், தம்பதி பூஜை, கலசாபிஷேகம் நடைபெற்றது. நிறைவாக மகா தீபாராதனை ஆகியன நடந்தது. இந்த நிகழ்ச்சியில் xஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.