சங்கமேஸ்வரர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா; பக்தர்கள் தரிசனம்
ADDED :607 days ago
கோவை; கோட்டைமேடு அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனமர் சங்கமேஸ்வரர் சுவாமி கோவில் சித்திரை பிரம்மோற்சவ விழா கடந்த 16ம் தேதி வாஸ்து சாந்தியுடன் துவங்கியது. அதைத்தொடர்ந்து 17ம் தேதி காலை ஏழு முப்பது மணி அளவில் கொடியேற்றம் நிகழ்வு நடந்தது. விழாவில் தினமும் மாலை சூரிய பிரபை, சந்திர பிரபை, யானை வாகனம், கைலாச வாகனம் மற்றும் மூஷிக ரிஷப வெள்ளி மயில் வாகனங்களில் உற்சவமூர்த்திகள் திருவீதியுலா வந்தனர். இதன் முக்கிய நிகழ்வாக 22ம் தேதி மாலை 7 மணி அளவில் உற்சவ மூர்த்திகளான அகிலாண்டேஸ்வரி தாயும் சங்கமேஸ்வர சுவாமிக்கும் திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து இன்று நடைபெற்ற விழாவில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, அம்பாள் அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.