காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
ADDED :561 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் கொண்ட ஒரே கோவிலான அஷ்டபுஜ பெருமாள் கோவில், பெருமாள் 108 திவ்யதேசங்களில் ஒன்றாக திகழ்கிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் பிரம்மோற்சவம் 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும். இந்தாண்டு சித்திரை பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தினமும் சுவாமி பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து அருள்பாலித்து வந்தார். விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று 29ல் காலை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட கோவிந்தா கோஷத்துடன் தேரை வடம் பிடித்தனர். விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் அறங்காவலர் குழு தலைவர் சந்தோஷ்குமார், செயல் அலுவலர் பூவழகி, தீர்த்தகாரர்கள், உபயதாரர்கள் இணைந்து செய்திருந்தனர்.