நவகிரக கோட்டையில் திருவிளக்கு பூஜை; சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :627 days ago
கோவை ; கோவை மாவட்டம் பல்லடத்தில் உள்ளது கோளறு பதி நவகிரக கோட்டை கோவில். இக்கோயிலில் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று திருவிளக்கு பூஜை நடந்தது. நிகழ்ச்சியில் பெரிய சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடந்ததது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக்கு பூஜை செய்து, சிவனை தரிசனம் செய்தனர்.