உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேத்துப்பட்டு லட்சுமி நரசிம்மர் கோவிலில் பிரமோற்சவ தேரோட்டம் கோலாகலம்

சேத்துப்பட்டு லட்சுமி நரசிம்மர் கோவிலில் பிரமோற்சவ தேரோட்டம் கோலாகலம்

திருவண்ணாமலை ; ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்ம கோவில்  சித்திரை பிரமோற்சவ தேர்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் , சேத்துப்பட்டு அடுத்த ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்ம கோவில் சித்திரை பிரமோற்சவ தேர்திருவிழா சிறப்பாக நடைபெற்று வந்தது. திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. முன்னதாக தேரில்  ஸ்ரீதேவி பூதேவியுடன் லக்ஷ்மி நரசிம்மர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனார். சிறப்பு பூஜைகளுக்கு பின், கோவிந்தா! நாராயணா, வெங்கட்டரமணா என கோஷத்துடன் ஏராளமான பக்தர்கள்  தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !