உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரகண்டநல்லூர் படவேடு மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண வைபவம்

அரகண்டநல்லூர் படவேடு மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண வைபவம்

திருக்கோவிலூர்; அரகண்டநல்லூர் படவேடு மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் நடந்தது.

அரகண்டநல்லூரில் பெருமை வாய்ந்த ஸ்ரீ படவேடு மாரியம்மன் கோவிலில் சித்திரை பெருவிழா கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது விழாவின் 7ம் நாளான நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை பார்வதி சமேத சிவன் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு சுவாமி முத்துப் பல்லக்கில் வீதி உலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை காலை நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !