உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயில் தெப்பத்திருவிழா ; டேங்கர் லாரி மூலம் குளத்திற்கு நீர்

திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயில் தெப்பத்திருவிழா ; டேங்கர் லாரி மூலம் குளத்திற்கு நீர்

திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயில் குளத்திற்கு தெப்பத்தை முன்னிட்டு டேங்கர் லாரி மூலம் நீர் நிரப்பப்படுகிறது.

திருப்புத்தூர் பூமாயிஅம்மன் கோயிலில் தற்போது வசந்தப்பெருவிழா நடந்து வருகிறது. விழாவில் பத்தாம் திருநாளான மே8 ல் தெப்பத்திருவிழா நடைபெறும். தற்போது அம்மன் குளத்தில் போதிய நீர் இல்லை. இதனால் தெப்பத்திருவிழா நடத்துவதற்கு வசதியாக தற்போது குளத்தில் உள் ஆதார படிக்கட்டு அளவில் தண்ணீர் நிரப்பும் முயற்சி வசந்தப் பெருவிழா குழுவினரால் துவக்கப்பட்டுள்ளது. டேங்கர் லாரி மூலம் போர்வெல் நீர் எடுத்து வந்து குளத்தில் விடுகின்றனர்.  இதற்காக டாக்டர் ஜெகதீசன் மற்றும் முன்னாள் எம்.பி.கோகுலஇந்திரா ஆகியோரின் தோட்டங்களில் போர்வெல் நீர் எடுக்கப்பட்டு டேங்கர் மூலம் குளத்திற்கு கொண்டு வரப்படுகிறது. தினசரி 20 டேங்கர் தண்ணீர் குளத்திற்கு பாய்ச்சப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !