கள்ளக்கடல் எச்சரிக்கை; திருச்செந்துாரில் பக்தர்களுக்கு தடை!
ADDED :622 days ago
திருச்செந்துார்; கடல் எவ்விதமான அறிகுறிகளும் இன்றி திடீரென கடல் சீற்றம் அடைவது, கள்ளக்கடல் நிகழ்வு என்று அழைக்கப்படுகிறது. திருடனை போல சற்றும் எதிர்பாராத தருணத்தில் வருவதால், இதை, கள்ளக்கடல் என அழைக்கின்றனர். திருச்செந்தூர் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் பாதுகாப்பு காரணத்திற்காக பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கடற்கரைகளுக்கு செல்வதைத் தவிர்க்குமாறும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.