ஆலம்பூண்டியில் உச்சிகால பூஜை
ADDED :4784 days ago
செஞ்சி: ஆலம்பூண்டி ஆலகாலேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நடந்தது. செஞ்சி தாலுகா ஆலம்பூண்டி மங்களாம்பிகை சமேத ஆலகாலேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஆலகாலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர்.இரவு 7.30 மணிக்கு அன்னாபிஷேகமும், மகா தீபாராதனையும் நடந்தது.பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இரவு 12 மணிக்கு உச்சிகால பூஜை செய்தனர்.