மாமல்லபுரம் ஸ்தல சயன பெருமாள் கோவிலில் ராமானுஜர் அவதார உற்சவம்
ADDED :583 days ago
மாமல்லபுரம்; வைணவ ஆன்மிக துற வியாக, ராமானுஜர் விளங் கினார். சித்திரை மாதம், திருவாதிரை நட்சத்திர நாளில், ஸ்ரீபெரும்புதுாரில் அவதரித்தார். வைணவ பக்தர்களில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பாகுபாடு இல்லை என விழிப்புணர்வு ஏற்ப டுத்தி, புரட்சி துறவியாக சிறப்பு பெற்றார். அவர் அவதரித்த நாளான நேற்று, மாமல்லபு ரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில், ஸ்தலசயனர், தேவியர், ராமானுஜர் ஆகி யோருக்கு, காலை சிறப்பு அபிஷேகம், திருமஞ்சன வழிபாடு நடந்தது. திருவாய்மொழி சாற் றுமறை சேவையாற்றி, பெருமாள் ராமானுஜருக்கு பரிவட்ட மரியாதை அளித் தார். பக்தர்கள் தரிசித்து வழிபட்டனர். குன்னத் துார் பக்தர்கள், உபய உற் சவமாக நடத்தினர்.