உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைகாசி மாத பூஜைக்காக சபரிமலையில் நடை திறப்பு

வைகாசி மாத பூஜைக்காக சபரிமலையில் நடை திறப்பு

சபரிமலை ; வைகாசி மாத பூஜைக்கான சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது; நாளை (15ம் தேதி) முதல் வரும் 19ம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, இன்று மாலை திறக்கப்பட்டது. மேல்சாந்தி நடை திறந்து விளக்கேற்றினார். வேறு பூஜைகள் இல்லை. இரவு, 7:30 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை அதிகாலை, 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நெய்அபிஷேகம் நடைபெறும். கணபதி ஹோமம், உஷபூஜை, உச்சபூஜை நடத்தப்பட்டு, 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.  மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, தீபாராதனை, அத்தாழ பூஜைக்கு பின், இரவு 7:30 மணிக்கு அடைக்கப்படும். மே, 19 இரவு, 7:30 மணிக்கு நடை அடைக்கப்படும். வரும் 19ம் தேதி வரை நடை திறந்திருக்கும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !