மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா விமரிசை
ADDED :508 days ago
தாம்பரம்: தாம்பரம் அருகே, செம்பாக்கத்தை அடுத்த மாடம்பாக்கம் பகுதியில், பழமையான தேனுபுரீஸ்வரர் கோவில் உள்ளது. தொல்லியல் மற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலின் பிரோம்மோற்சவ விழா, கடந்த 13ம் தேதி துவங்கியது. இந்த விழாவின் ஏழாம் நாளான நேற்று, தேர் திருவிழா நடந்தது. பொய்கால் குதிரை, மயிலாட்டம், ஒயிலாட்டம் மற்றும் இசை வாத்தியங்கள் முழங்க, அலங்கரிக்கப்பட்ட தேரில் தேனுபுரீஸ்வரர் எழுந்தருளி வீதி உலா சென்றார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, வடம் பிடித்து தேர் இழுத்தனர்.தேர் செல்லும் வழியில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.