உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமங்கலம் சிதம்பரேஸ்வரர் கோவில் திருக்கல்யாண விழா

திருமங்கலம் சிதம்பரேஸ்வரர் கோவில் திருக்கல்யாண விழா

கண்டமங்கலம் : திருமங்கலம் சிவகாமசுந்தரி உடனமர் சிதம்பரேஸ்வரர் கோவில் திருக்கல்யாண வைபவ விழா நேற்று விமர்சியாக நடந்தது. கண்டமங்கலம் ஒன்றியம் திருமங்கலம் கிராமத்தில் உள்ள சிவகாமசுந்தரி உடனமர் சிதம்பரேஸ்வரர் கோவில் திருக்கல்யாண வைபவ விழா நடந்தது. விழாவையொட்டி 18 ம் தேதி மாலை 4.00 மணிக்கு முதற்கால வேள்வி வழிபாடும், மாலை 6.00 மணிக்கு கோமலவள்ளி தாயார் உடனமர் ஆராவமுதப் பெருமாள் கோவிலில் இருந்து 108 சீர்வரிசை தட்டுகளுடன் பெண் அழைப்பு செய்து திருக்கோவில் வந்தடைந்தது. நேற்று காலை 7.00 மணிக்கு மேல் 9.00 மணிக்குள் ஆண்டு நிறைவுக்கான இரண்டாம் கால வேள்வி வழிபாடு நடந்தது. தொடர்ந்து சுவாமிகளுக்கு தீர்த்த அபிேஷகம் நடந்தது. காலை 11.30 மணிக்கு சிதம்பரேஸ்வரர்-சிவகாமசுந்தரி திருக்கல்யாண வைபவம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !