உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் புகுந்த மழை நீர்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் புகுந்த மழை நீர்

கரூர்; கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை, கன மழை பெய்தது. பிரசித்தி பெற்ற, கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் மழை நீர் புகுந்தது, தென்மேற்கு வங்க கடலில் உருவான, புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வடகிழக்காக நகர்ந்து வரும், 24ல் வங்க கடலின் நடுப்பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இதனால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று மாலை, 3:30 முதல், 4:30 மணி வரை கரூர் மாவட்டத்தில், இடியுடன் கூடிய கன மழை பெய்தது. குறிப்பாக கரூர் நகரம், வெள்ளியணை, பசுபதிபாளையம், தான்தோன்றிமலை, வெங்கமேடு, வாங்கல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் வாங்கல் சாலை, ஜவஹர் பஜார், கோவை சாலைகளில் மழை நீர் சிறிது நேரம் ஓடியது. மேலும், கரூர் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற, கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் மழை நீர் புகுந்தது. இதனால், நேற்று மாலை பிரதோஷ விழாவுக்கு வந்த பக்தர்கள் அவதிப்பட்டனர். கோவிலில் இருந்து மழை நீரை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !