பகவதி அம்மன் கோயிலில் உலக நன்மைக்காக 1008 விளக்கு பூஜை
ADDED :542 days ago
தேவிபட்டினம்; தேவிபட்டினம் அருகே அத்தியூத்து பகவதி அம்மன் கோயிலில், உலக நன்மைக்காக 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. முன்னதாக மூலவர் பகவதி அம்மன், பூர்ண புஷ்பகலா சமேத உதிரமுடைய அய்யனார் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றன. தொடர்ந்து மாலையில் நடைபெற்ற மாங்கல்ய பூஜை மற்றும் சக்தி கேந்திரம், நாமாவளி அர்ச்சனை உள்ளிட்டவைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.