திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவருக்கு சிறப்பு வழிபாடு
ADDED :747 days ago
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு யோகபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. குன்றக்குடி ஐந்து கோயில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் பைரவர் அமர்ந்த யோக நிலையில் எழுந்தருளியுள்ளார். இவருக்கு அஷ்டமி தினங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். நேற்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலை 11:30 மணிக்கு ரமேஷ் குருக்களால் சிறப்பு பூஜைகள் நடந்து யோகபைரவருக்கு பல வித திரவியங்களால் அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பைரவருக்கு தீபராதனை நடந்தது. திரளாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.