அக்னி தலமான அருணாசலேஸ்வரர் கோயிலில் அண்ணாமலை சுவாமி தரிசனம்
ADDED :506 days ago
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தமிழக பா.ஜ., மாநிலதலைவர் அண்ணாமலை சுவாமி தரிசனம் செய்தார்.
லிங்கமே மலையாக அமைந்த மலை. தென்னிந்தியாவின் மிகச் சிறந்த சிவதலமாக திகழும் சிவ தலம். பஞ்சபூதம் தலங்களில் முக்கியமான அக்னி தலம் இது. நினைத்தாலே முக்தி தரும் திருஅண்ணாமலை என சிறப்பு பெற்ற தலத்தில் தமிழக பா.ஜ., மாநிலதலைவர் அண்ணாமலை சுவாமி தரிசனம் செய்தார். கோயிலில் அவருக்கு சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது. முதலில் சம்பந்த விநாயகரை தரிசனம் செய்த அண்ணாமலை, அருணாசலேஸ்வரரை தரிசனம் செய்தார். கோவில் சார்பில் குருக்ககள் பிரசாதம் வழங்கினார். அவருடன் ஏராளமான பக்தர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர்.