திருவேடகம் சீரடி சாய்பாபா கோயிலில் வருஷாபிஷேகம்
ADDED :583 days ago
சோழவந்தான்; சோழவந்தான் அருகே திருவேடகம் சீரடி சாய்பாபா கோயில் 15ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி சிறப்பு யாகசாலை பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கின. இரண்டாம் கால யாக பூஜையை தொடர்ந்து சுவாமிக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. பின் பால்,பன்னீர் உள்ளிட்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.