உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாமந்திபுரம் காளியம்மன் கோவில் திருவிழா வெகு விமரிசை

சாமந்திபுரம் காளியம்மன் கோவில் திருவிழா வெகு விமரிசை

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் அடுத்த, சாமந்திபுரம் கிராமத்தில், காளியம்மன் சமேத அகோர வீரபத்திரர் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறும். நடப்பாண்டு திருவிழா நேற்று முன்தினம், காலை 7:00 மணி அளவில் அம்மனுக்கு அபிஷேகத்துடன் துவங்கியது. அதை தொடர்ந்து, காலை, 10:00 மணி அளவில் கரக வீதியுலா, பிற்பகல் 1:00 மணிக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. மாலை ஊரணி பொங்கலிடும் நிகழ்ச்சியும், இரவு 9:00 மணி அளவில் காளியம்மன் மற்றும் வீரபத்திரர் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !