உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புல்லாணி சக்கர தீர்த்த தெப்பக்குளத்தில் எச்சரிக்கை பலகை வைக்க கோரிக்கை

திருப்புல்லாணி சக்கர தீர்த்த தெப்பக்குளத்தில் எச்சரிக்கை பலகை வைக்க கோரிக்கை

திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் முன்புறம் சக்கர தீர்த்த தெப்பக்குளம் அமைந்துள்ளது. 5 ஏக்கர் பரப்பிலான சக்கர தீர்த்த தெப்பக்குளத்தில் ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை காலங்களில் மழைநீர் சேகரிப்பால் நிறைந்து காணப்படுகிறது. சமீபத்தில் பெய்த கோடை மழையும் சக்கர தீர்த்தத்திற்கு கை கொடுத்துள்ளது. இந்நிலையில் அதிக ஆழம் கொண்ட சக்கர தீர்த்த தெப்பக்குளத்தில் ஆர்வம் மிகுதியில் சிறுவர், சிறுமியர்கள் மற்றும் பொதுமக்கள், பக்தர்கள் குளத்தில் இறங்கும் பொழுது விபத்து அபாயம் நிலவுகிறது. எனவே கோயில் நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விழிப்புணர்வு பலகை நிறுவி விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !