ராமலிங்க பிரதிஷ்டை விழா துவக்கம் : ராமேஸ்வரத்தில் ராவணன் வதம்
ADDED :852 days ago
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழா யொட்டி ராவணன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. ராமேஸ்வரம் கோயிலில் தல வரலாற்றை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ராமலிங்க பிரதிஷ்டை விழா கொண்டாடப்படும். அதன்படி நேற்று மாலை ராமேஸ்வரம் கோயிலில் இருந்து பல்லாக்கில் ஸ்ரீ ராமர், சீதை, லட்சுமணர், அனுமான் புறப்பாடாகி திட்டக்குடியில் எழுந்தருளினர். பின் அங்கிருந்த ராவணனை ஸ்ரீ ராமர் அம்பு எய்து வதம் செய்யும் நிகழ்ச்சியை கோவில் குருக்கள் நடத்தினார். பின்னர் ஸ்ரீ ராமருக்கு மகா தீபாராதனை நடந்தது. அப்போது அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.