ராமேஸ்வரத்தில் மகாராஷ்டிரா பக்தர்கள் தையல் மிஷின் நன்கொடை
ADDED :555 days ago
ராமேஸ்வரம்; ராமேஸ்வரத்தில் ராமாயண சொற்பொழிவு நிகழ்வில் பங்கேற்ற மகாராஷ்டிரா பக்தர்கள் ஏழை பெண்கள் இருவருக்கு தையல் மிஷின் நன்கொடையாக வழங்கினர்.
ராமேஸ்வரத்தில் தனியார் மஹாலில் மகாராஷ்டிரா சேர்ந்த ஶ்ரீ லாடுபாய் நாராயினி பாரத வருச அறக்கட்டளை சார்பில் ராமாயண சொற்பொழிவு நிகழ்ச்சி 5 நாள்கள் நடக்கிறது. இதில் மகராஷ்டிரா, உ.பி., சேர்ந்த 200 க்கும் மேலான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இந்த பக்தர்கள் ஏழை பெண்களுக்கு தையல் மிஷின் வழங்கிட முடிவு செய்து ராமேஸ்வரத்தைச் சேர்ந்த இரு பெண்களுக்கு நேற்று தையல் மிஷினை நன்கொடையாக வழங்கினர். இதில் ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ., பார்வையாளர் முரளிதரன், பா.ஜ., மாவட்ட சிந்தனையாளர் பிரிவு தலைவர் மாரி, ராமேஸ்வரம் ரோட்டரி சங்க நிர்வாகிகள் முருகன், எம்.முருகன், பலர் பங்கேற்றனர்.