சங்கராபுரம் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா
ADDED :510 days ago
சங்கராபுரம்; ஜவளிகுப்பம் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது. சங்கராபுரம் அடுத்த ஜவளிகுப்பம் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தேர் திருவிழா நேற்று நடத்தது. இதையொட்டி, நேற்று காலை அம்மனுக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட வாசனாதி திரவியங்களால் சிறப்பு அபிேஷகம் நடந்தது. பின் அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் அமரவைக்கப்பட்ட பின், ஊர் பொது மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். சுற்று வட்ட கிராம மக்கள் ஆயிரக்கணக்கில் பங்கேற்றனர். சங்கராபுரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.