உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேட்டுப்பாளையம் எல்லை கருப்பராயனுக்கு சிறப்பு பூஜை

மேட்டுப்பாளையம் எல்லை கருப்பராயனுக்கு சிறப்பு பூஜை

மேட்டுப்பாளையம்; ஒன்னிபாளையம் எல்லை கருப்பராயன் கோவிலில் பெளர்ணமி தினத்தையொட்டி, எல்லை கருப்பராயனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.காரமடை அருகே ஒன்னிபாளையத்தில் உள்ள எல்லை கருப்பராயன் கோவிலில், பெளர்ணமி தினத்தையொட்டி, எல்லை கருப்பராயனுக்கு, சிறப்பு அபிசேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது. பனை விவசாயிகள் நலனுக்காக, பனை பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து, கருப்பராயன் கோவில் வளாகத்தில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பனை தொழிலாளர்கள் சார்பில் பனை மரத்தின் ஓலைகள் வாயிலாக செய்யப்பட்ட கைவினை பொருட்களான அலங்கார கூடை, விசிறி, பை, உள்ளிட்டவை அரங்குகள் அமைத்து காட்சிக்கு வைக்கப்பட்டது. இதனை கோவிலுக்கு வந்த பக்தர்கள், கண்டு ரசித்தும், கைவினை பொருட்களை வாங்கியும் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !