/
கோயில்கள் செய்திகள் / காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி தரிசனம்
காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி தரிசனம்
ADDED :504 days ago
காளஹஸ்தி; சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலுக்கு கர்நாடக மாநில உயர்நீதிமன்ற நீதிபதி கே.நடராஜன் தனது குடும்பத்தாருடன் சுவாமி தரிசனம் செய்தனர். இவரை கோயில் துணை செயல் அலுவலர் வித்யாசாகர் ரெட்டி சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு சிறப்பு தரிசன ஏற்பாடுகளையும் செய்தார். கோயில் வளாகத்தில் கர்நாடக நீதிபதிக்குப் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு கோயில் தீர்த்தப் பிரசாதம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கோயில் கண்காணிப்பாளர் வாசு, கோயில் ஆய்வாளர் பாபு, சித்தூர் நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.