உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடி வராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமி விழா

பரமக்குடி வராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமி விழா

பரமக்குடி; பரமக்குடி சத்தேழு கன்னிமார் கோயிலில் அருள் பாலிக்கும் வராகி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமி விழா நடந்தது. பரமக்குடி நகராட்சி அருகில் சத்தேழு கன்னிமார் கோயில் உள்ளது. இங்கு தனி சன்னதியில் வராகி அம்மன் அருள் பாலிக்கிறார். நேற்று இரவு தேய்பிறை பஞ்சமி விழாவையொட்டி அம்பாளுக்கு மகாயாகம் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. பெண்கள் பலரும் மஞ்சள் அரைத்து கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு பட்டு வஸ்திரம் சாற்றி, மலர்களால் அலங்கரித்தனர். ஏராளமான பெண்கள் மற்றும் பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !