உயிர் கொடுத்தவன்
ADDED :430 days ago
முதல் யுகமான கிருத யுகத்தில் உடலிலுள்ள சதை மறைந்து எலும்புகள் தெரியும் வரை மனிதர்கள் வாழ்ந்தனர். திரேதாயுகத்தில் சதை இருக்கும் வரையிலும், துவாபர யுகத்தில் ரத்தம் இருக்கும் வரையிலும் வாழ்ந்தனர். ஆனால் கலியுகமான இப்போது உணவினால் மட்டுமே மனிதன் வாழ முடியும்.பசியைத் தாங்கவும் முடியாது. பசி தாக்கினால் மனிதன் இறந்து விடுவான் என்கிறார் காஞ்சி மஹாபெரியவர். அதனால் தான் ‘உண்டி(உணவு) கொடுத்தவனை உயிர் கொடுத்தவன்’ என்கிறோம்.