உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றத்தில் அமாவாசை தீர்த்த உற்ஸவம்; சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்

திருப்பரங்குன்றத்தில் அமாவாசை தீர்த்த உற்ஸவம்; சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமாவாசையை முன்னிட்டு அஸ்தர தேவருக்கு தீர்த்த உற்ஸவம் நடந்தது. பல்லக்கில் அஸ்தரதேவர் சரவணப்பொய்கை கொண்டு செல்லப்பட்டார். ஆறுமுக சுவாமி சன்னதி முன்பு யாகம் வளர்க்கப்பட்டு, பூஜை முடிந்து சரவண பொய்கை தண்ணீரில் அஸ்தர தேவருக்கு பால், மஞ்சள் பொடி, திரவியப்பொடி உள்பட 16 வகை அபிஷேகம் முடிந்து தீர்த்த உற்ஸவம் நடந்தது. மலைக்கு பின்புறம் எழுந்தருளியுள்ள பால்சுனை கண்ட சிவபெருமானுக்கு அபிஷேகம், பூஜை முடிந்து சந்தன காப்பு அலங்காரமானது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !