கும்பகோணம் சியாமளா தேவி காளியம்மன் கோயிலில் முளைப்பாரி ஊர்வலம்
ADDED :560 days ago
தஞ்சாவூர்; கும்பகோணம் அருகே திருவலஞ்சுழி ஸ்ரீ சியாமளா தேவி காளியம்மன் கோயிலில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. திரளான பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து சாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவலஞ்சுழி கீழத் தெருவில் ஸ்ரீ சியாமளாதேவி காளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்நிலையில் இக்கோவிலின் பால்குடம் திருவிழாவை முன்னிட்டு வெள்ளை விநாயகர் ஆலயத்தில் இருந்து ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து ஆட்டம் பாட்டங்களுடன் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தடைந்தனர். இதில் திரளான பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து சாமி தரிசனம் செய்தனர் தொடர்ந்து கோவில் சன்னதியில் பெண்களின் கும்மி ஆட்டங்களுடன் அம்மனுக்கு தீபாரதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.