உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தி.மலை கோவிலில் தீபாவளி சிறப்பு பூஜை

தி.மலை கோவிலில் தீபாவளி சிறப்பு பூஜை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீபாவளியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீபாவளியை முன்னிட்டு நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர் மற்றும் உண்ணாமுலையம்மனுக்கு எண்ணெய் காப்பு சாற்றப்பட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து புத்தாடை மற்றும் நாக ஆபரணம் அணிவிக்கப்பட்டன. இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு வழிபட்டனர். மேலும், ஸ்வாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களும் புத்தாடை அணிந்து நவக்கிரக சன்னதியில் தீப விளக்கேற்றியும் வழிபாடு நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !