உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒடிசா புரி ஜெகன்நாதர் ரத யாத்திரையில் கீழே விழுந்த பலபத்திரர் சிலை

ஒடிசா புரி ஜெகன்நாதர் ரத யாத்திரையில் கீழே விழுந்த பலபத்திரர் சிலை

புவனேஸ்வரம்: ஒடிசாவில் புரி ஜெகன்நாதர் ரத யாத்திரையின் போது பலபத்திரர் சிலை கீழே விழுந்த சம்பவத்தில் 7 பக்தர்கள் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.ஒடிசா மாநிலத்தில் புரி கடற்கரை நகரத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற புரி ஜெகன்நாதர் கோவில். இக்கோவிலின் உற்சவர்களான ஜெகன்நாதர், பலபத்திரர், சுபத்திரை ஆகியோர், ஆண்டுதோறும், தனித்தனியாக மூன்று ரதங்களில் புரி நகரத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். நேற்று நடந்த ரத யாத்திரைக்கு பின் நேற்று மாலை மூன்று சிலைகளும், கவுண்டிச்சா கோயிலில் உள்ள அர்த்த மண்டபத்திற்கு எடுத்து சென்ற போது பலபத்திரர் சிலை, ரத பீடத்திலிருந்து சரிந்து விழுந்தது, இதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதி்ல் 7 பக்தர்கள் காயமடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !