பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா
ADDED :446 days ago
தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், ஆனி திருமஞ்சன விழா வெகு சிறப்பாக நடந்தது.பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், ஆனி நாற்று நடவு உற்சவம், கடந்த, 3ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாள் திருவிழாவில் நாள்தோறும், சுந்தரமூர்த்தி நாயனார் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. ஒன்பதாம் நாளில், நாற்று நடவு உற்சவம் நிறைவடைந்தது. பத்தாம் நாளான நேற்று, பட்டீஸ்வரர் கோவிலில், ஆனி உத்திர நட்சத்திர தினத்தையொட்டி, திருமஞ்சன விழா நடந்தது. நேற்று காலை, ஸ்நபன கலச பூஜை நடந்தது. தொடர்ந்து, நடராஜ பெருமான், சிவகாமி அம்பாளுக்கு, 16 வகையான திரவியங்கள் கொண்டு, மஹா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. அதன்பின், நடராஜ பெருமான், சுந்தர மூர்த்தி நாயனாருக்கு, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.