திருப்பரங்குன்றம் மகா வராஹி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம்
ADDED :483 days ago
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மகா வராஹி அம்மன் கிரஹாலயத்தில் ஆஷாட நவராத்திரி விழா ஜூலை 7ல் துவங்கியது. ஜூலை 15வரை தினம் மூலவர், உற்ஸவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை, தீபாராதனை முடிந்து, விக்னேஸ்வர பூஜை சகஸ்ர நாம ஹோமம் நடந்தது. உச்ச நிகழ்ச்சியாக இன்று வருடாபிஷேகம் நடந்தது. காலையில் யாகபூஜை முடிந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.