உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் சங்கர மடத்தில் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம்

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம்

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் காமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதி மஹா பெரியவா சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் உத்தரவின்படி, காஞ்சிபுரம் சங்கர மடத்தில், ‘ஆல் இந்தியா விஷ்ணு சகஸ்ரநாம கல்சுரல் பவுண்டேஷன்’ சார்பில், ஆண்டுதோறும் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் நடந்து வருகிறது. அதன்படி, 36வது ஆண்டு பாராயணம், பவுண்டேஷன் தலைவர் ஸ்ரீதர், ஐ.ஏ.எஸ்.,, தலைமையில் நேற்று நடந்தது. ஆலோசகர் ராம்ஜி முன்னிலை வகித்தார். இதில் செயலர் விஜயலட்சுமி துணை செயலர் உஷா உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் பங்கேற்று விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்தனர். தொடர்ந்து மஹா பெரியவா பிருந்தாவனத்தில் பிரசாதம், அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !