உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் கன்னியம்மன் கோவிலில் தீ மிதி விழா

விழுப்புரம் கன்னியம்மன் கோவிலில் தீ மிதி விழா

விழுப்புரம்; விழுப்புரம் கே.கே.ரோடு கன்னியம்மன் கோவில் தீ மிதி விழா நடந்தது. இக்கோவிலில், தீமிதி திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து இன்று தீமிதி விழா நடந்தது. அதனையொட்டி, காலை 9:00 மணிக்கு வீரவாழியம்மன் கோவிலில் இருந்து பால்குடம்  வீதியுலா வந்து, கன்னியம்மனுக்கு பாலாபிஷேகமும், தொடர்ந்து, மகா தீபாராதனை நடந்தது. மதியம் 12:00 மணிக்கு ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து கரகம் ஜோடித்தும், அம்மன் வீதியுலாவும் நடந்தது. தொடர்ந்து தீமிதி விழா நடந்தது. திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !