திரிசூலகாளியம்மன் கோவிலில் 40ம் ஆண்டு தீமிதி திருவிழா
ADDED :442 days ago
திருப்புலிவனம்; உத்திரமேரூர் ஒன்றியம், திருப்புலிவனம் திரிசூலகாளியம்மன் கோவிலில் 40ம் ஆண்டு தீமிதி திருவிழா விமரிசையாக நடந்தது.
விழாவையொட்டி, காலை 6:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மஹா தீபாராதனைள், உலக நன்மை வேண்டி வேள்வி, திருவிளக்கு பூஜை, பக்தர்கள் வேப்பம் சீலை சார்த்தல், கூழ் வார்த்தல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், ஆன்மிக சொற்பொழிவு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. இரவு 7:00 மணியளவில் காப்பு கட்டி விரதம் இருந்த திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின், திரிசூலகாளியம்மன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார். அதை தொடர்ந்து பக்தி நாடகம் நடந்தது. இதில், திருப்புலிவனம், மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.