பழநி அம்மன் கோயில்களில் சிறப்பு அலங்காரம் பூஜை
ADDED :473 days ago
பழநி; பழநி பகுதியில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பழநியில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோயில்களில் சிறப்பு அலங்காரம் பூஜைகள் நடைபெற்றது. இதில் பெரிய நாயகி அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பழநி ரெணகாளியம்மன் கோயில், கிரி விதி காளிகாம்பாள் கோயில், பழநி, கலையம்பத்தூர் கைலாசநாதர் கல்யாணி அம்மன் கோயில், அடிவாரம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். நேர்த்திக்கடனாக கூழ், அன்னதானம் பக்தர்கள் வழங்கினர்.